
இந்தியாவில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்துவிட்டது. பெரும்பாலான மக்கள் சிலிண்டர் பயன்படுத்தி வருகிறார்கள். பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், சமையலறை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அரசு பெண்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்பை கொடுத்து வருகிறது.
அதாவது இந்த திட்டத்தில் எரிவாயு சிலிண்டர்கள் மானிய விலையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமையல் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் இன்றைக்குள்(மார்ச் 31) கை ரேகையை பதிவு செய்யவில்லை என்றால் சிலிண்டர் கிடைக்குமா என்ற குழப்பம் எழுந்தது.
அதன்படி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வரும் என்றும் இனி கைரேகை பதிவு செய்யாதவர்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைக்காது என்றும் கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலில் தற்போது உண்மை இல்லை என்று தெரியவந்துள்ளது. அதாவது ஆதார் அட்டையை சரி பார்ப்பதற்காக கைரேகையை பதிவு செய்ய விட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி கேஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இதனால் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கைரேகை பதிவு செய்ய விட்டாலும் வழக்கம் போல் சிலிண்டர் கிடைக்கும் என்பது உறுதியாகிவிட்டது.