தமிழகத்தில் நிலவும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல் தொழில் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில், தமிழக மின்சார வாரியம் இன்று (மார்ச் 14) ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஹோட்டல்களின் சுமையைக் குறைக்க “மின் கட்டணத்தில் ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய் சலுகை வழங்கப்படும்” என்ற அதிரடி செய்தியை உடைத்துள்ளார். கேஸ் தட்டுப்பாட்டைச் சமாளிக்க மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தும் ஹோட்டல்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.
அடுத்த அதிரடியாக, விறகு அடுப்புகளைப் பயன்படுத்த விரும்பும் ஹோட்டல்களுக்கு ஒரு செம சான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இனி ஹோட்டல்கள் விறகு அடுப்புகளைப் பயன்படுத்த “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் எந்தவித அனுமதியும் பெறத் தேவையில்லை” என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பொதுமக்களின் சிரமத்தைப் போக்க ரேஷன் கடைகளில் கூடுதலாக மண்ணெண்ணெய் விற்பனை செய்யவும் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் இந்த ‘சரவெடி’ அறிவிப்புகள் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
