காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து தகர்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் நேற்று காஷ்மீர், ராஜஸ்தான், அமிர்தசரஸ், சண்டிகர் என எல்லையோரம் இருக்கும் மாநிலங்களில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இதன் காரணமாக இந்தியாவின் முழ்படைகளும் களத்தில் இறங்கி அந்த தாக்குதல்களை முறியடித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள கராச்சி, ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் என முக்கிய இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியதில் அவர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் துபாய்க்கு மாற்றப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்த நிலையில் தற்போது அவர்களின் கோரிக்கையை துபாய் மறுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது தற்போது பாகிஸ்தானுக்கு பெரும் அடியாக நடந்துள்ளது.