கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டம் பொன்னானி பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு தனது பிரச்சனை தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க முயன்றுள்ளார். அப்போது ஐபிஎஸ் அதிகாரி சுஜித் காவல்துறை அதிகாரிகள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் அந்த பெண் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். காவல்துறை சார்பில் பெண்ணின் புகாருக்கு உரிய ஆதாரங்கள் இல்லை என வாதிடப்பட்டது. அந்த விசாரணையின் முடிவில் கேரளா உயர்நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் மீதான பாலியல் புகார் மீது பத்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.