கேரளாவில் மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மட்டுமின்றி இடுக்கி, பாலக்காடு மலப்புரம் மற்றும் பட்டினத்தொட்டா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையான நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கேரள நீர் வளம் கடல் அறிவியல் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. அதுமட்டுமின்றி இடுக்கி, கொக்கையா உள்ளிட்ட 20 இடங்களிலும் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.