பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம் ஆகும். நடப்பு ஆண்டு பிரான்சில் 76வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா மே 16-ஆம் தேதி தொடங்கியது. இது வரும் 27-ஆம் தேதி வரை 12 நாட்கள் விழா கோலாகலமுடன் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் இந்தியா சார்பாக நடிகைகள் சாரா அலி கான், மனுஷி சில்லார், ஈஷா குப்தா ஆகியோர் பங்கேற்றனர். இந்த திரைப்பட விழாவில் ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் இந்திய திரை துறையை சேர்ந்த நடிகைகளும் கலந்துகொண்டனர்.

இந்தி திரைப்படங்களில் நடித்து வரக்கூடிய நடிகை சாரா அலி கான் மணமகள் அணியும் லெகங்கா உடையை அணிந்தபடி அரங்கில் நடந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்து உள்ளார். அதேபோல் இந்தி, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகை ஊர்வசி ரவுதலா கேன்ஸ் திரைப்படவிழாவில் பிங்க் வண்ண கவுன் அணிந்தபடியும், முதலை நெக்லெஸ் ஒன்றை அணிந்தும் வந்தது பார்வையாளர்களை ஈர்த்தது. மேலும் நடிகை மனுஷி சில்லார் White டிரஸில் வந்து கலக்கினார்.