கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் வைர விழாவையொட்டி பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்..

கேந்திரிய வித்யாலயா குடும்பத்தின் அனைத்து மாணவர்களுக்கும், பணியாளர்களுக்கும், துணைப் பணியாளர்களுக்கும் மற்றும் பழைய மாணவர்களுக்கும் அவர்களின் வைரவிழா நல்வாழ்த்துக்கள்! இந்த மதிப்பிற்குரிய கல்விச் சமூகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் போற்றுவதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாகும். பல ஆண்டுகளாக, பல மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதன் மூலம் நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கேந்திரிய வித்யாலயாக்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன. மாணவர்களின் கல்விச் சிறப்பிற்கும், முழுமையான வளர்ச்சிக்கும் அவர்களின் பங்களிப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது.