
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அவர், சுயேச்சை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது ஓ.பன்னீர்செல்வமே போட்டியிடுகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “15க்கும் அதிகமான தொகுதிகளை பாஜகவிடம் கேட்டோம். ஆனால் கிடைக்கவில்லை. நானே களத்தில் நின்று தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க போகிறேன். இரட்டை இலையை பெறுவதற்கு சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். சின்னத்தை பெறுவதற்காகத் தான் தேர்தலில் களம் இறங்குகிறேன்” என்றார்.