கேஜிஎஃப் படத்தின் மூன்றாம் பாகம் எப்போது உருவாகும் என்ற ரசிகர்களின் நீண்ட நாள் கேள்விக்கு நடிகர் யாஷ் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
இப்போதைக்கு கேஜிஎஃப் 3 உருவாக வாய்ப்பில்லை என்றும், தான் தற்போது ‘டாக்சிக்’ மற்றும் ‘ராமாயணா 1, 2’ போன்ற படங்களில் பிஸியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இயக்குனர் பிரசாந்த் நீலுடன் தான் அடிக்கடி பேசி வருவதாகவும், மூன்றாம் பாகத்திற்குச் சரியான கதை அமைந்துவிட்டால் நிச்சயம் ‘கேஜிஎஃப் 3’ உருவாகும் என்றும் கூறி ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார்.
