
மஹாராஷ்டிரா மாநிலம் சகினாகா பகுதியில் ராஜேந்திர ஷிண்டே (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜூன் ஒன்றாம் தேதி பிறந்த நாள். இந்நிலையில் ராஜேந்திர ஷிண்டேவின் மனைவி ரஞ்சனா ஷிண்டே தனது கணவருக்காக கேக் வாங்கி வந்துள்ளார். ரஞ்சனா வீட்டு வேலை பார்க்கிறார். இதனால் வேலை பார்க்கும் இடத்தில் தாமதமானதால் மதியம் 12:15 மணிக்கு கேக் வாங்கி வந்தார். இந்நிலையில் கேக்கை தாமதமாக கொண்டு வந்ததால் ஆத்திரமடைந்த ராஜேந்திர ஷிண்டே தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அவரது மகன் தட்டி கேட்டார். இதில் கோபமடைந்த ராஜேந்திர ஷிண்டே தனது மகனை கத்தியால் குத்தியுள்ளார். காப்பாற்ற முயன்ற தனது மனைவியையும் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான ராஜேந்திர ஷிண்டேவை தேடி வருகின்றனர்.