தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மீன் கடைகளில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் மீன்வளத் துறையினர் அடங்கிய குழுவினர் மீன் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கடையில் கெட்டுப்போன பழைய மீன்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதனால் அதிகாரிகள் கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர். மேலும் பொது மக்களுக்கு தரமான மீன்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் கெட்டுப் போன மீன்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.