கள்ளக்குறிச்சியில் அதிமுக, பாஜக உள்ளிட்ட மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 400 பேர் திமுகவில் இணைந்துள்ளனர். ஒருபுறம் அனைத்து கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் நிலையில், மறுபுறம் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்களை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில் இன்று 400 பேர் திமுகவில் இணைந்துள்ளனர்