தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கான வயது உச்சவரம்பு 60 இலிருந்து 70 ஆக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

அதில் நேற்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கான வயது உச்சவரம்பு 60 இலிருந்து 70 ஆக உயர்த்தப்படும். கூட்டுறவு வங்கிகளின் மூலம் ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க கடன், வாகனத்தின் விலையில் 90 சதவீதம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.