இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொது இடங்களுக்கு செல்லும்போது பொதுமக்கள் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தற்போது கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரடியாகவும் காணொளி வாயிலாகவும் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் இந்த வசதியை வழக்கறிஞர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.