இந்தியாவில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் தொடங்கிவிட்ட நிலையில் பலரும் கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலமாக ஆன்லைன் பரிவர்த்தனை செய்து வருகிறார்கள் . இதன்மூலமாக ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு பணத்தை அனுப்புகிறார்கள். மேலும் செல்போன் போன்றவற்றிற்கும் ரீசார்ஜ் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில்  ஒவ்வொரு மொபைல் ரீசார்ஜ் இருக்கும் மூன்று ரூபாய் கட்டணம் வசூலிக்க போவதாக கூகுள் பே அறிவித்துள்ளது. முன்னதாக ரீசார்ஜ் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஆனால் இப்பொழுது google pay  தன்னுடைய கொள்கையை மாற்றி இருக்கிறது. google பே நிறுவனம் இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. ரூ.100  வரை ரீசார்ஜ் செய்யும் பரிவர்த்தனைகளை  எந்த ஒரு கட்டணமும் வசூலிக்க படாது என்று கூறப்படுகிறது.