ஈரான் மண்ணில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பழிவாங்க, அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை இன்று (ஏப்ரல் 1) இரவு முதல் தாக்கப்போவதாக ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) பகீர் மிரட்டல் விடுத்துள்ளது. மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள், டெஸ்லா என மொத்தம் 18 நிறுவனங்களை ‘லெஜிடிமேட் டார்கெட்’ என அறிவித்துள்ள ஈரான், இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்குத் தாக்குதல் தொடங்கலாம் என எச்சரித்துள்ளது.

“எங்க நாட்டுல நடந்த ஒவ்வொரு பயங்கரவாதத்துக்கும் பதிலடி உண்டு… ஊழியர்களே உடனே வெளியேறுங்க!” என ஈரான் விடுத்துள்ள அறிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க ராணுவம் தனது போர்த்திறனை மேம்படுத்த ஏஐ (AI) மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு இந்த நிறுவனங்களே மூளையாகச் செயல்படுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள வெள்ளை மாளிகை, “ஈரானின் எந்தவொரு ஏவுகணை அல்லது ட்ரோன் தாக்குதலையும் முறியடிக்க அமெரிக்க ராணுவம் 100% தயாரா இருக்கு!” எனத் கெத்தாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 90% தாக்குதல்களை முறியடித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், இன்று இரவு நடக்கப்போகும் அந்தப் ‘பதிலடி’ உலகப் பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத் துறையிலும் ஒரு பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.