உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கூகுள் கொண்டுள்ளது. தற்போது கூகுள் நிறுவனமானது தன் அடுத்த வெர்ஷன் அப்டேட்டை அடுத்தவாரம் தொடங்கவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சை. கூகுளின் போட்டி தேடு பொறியான மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பிங்(Bing) தேடுபொறியில் செயற்கை நுண்ணறிவை புகுத்த இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், கூகுள் விழித்துக் கொண்டது.

இதையடுத்து கூகுள் உடனே தன் தேடுபொறியிலும் செயற்கை நுண்ணறிவை புகுத்த வேண்டும் என திட்டவட்டமாக முடிவெடுத்து அதற்கான பணிகளை தொடங்கி விட்டது. ஆகவே இனி மிகவும் துல்லியமான மற்றம் நம்பகத்தன்மையுள்ள தரமான பதில்கள் பயனர்களுக்கு கிடைக்கும் என கூகுள் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.