தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். அதன்படி புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற இருக்கிறது. பண்டிகைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இன்று உள்ளூர் விடுமுறை வழங்கி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யஸ்வரா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று திருவிழா நடைபெற இருப்பதால் வேதாரண்யம் தாலுகாவுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகள் போன்றவைகள் இன்று செயல்படாது. மேலும் இன்று பொது தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தால் அதை வழக்கம்போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.