கேரளா மாநிலத்தில் மேத்யூஸ் முலக்கல்(40), லினி ஆபிரகாம் (38) எனும் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரின் (14), இசாக் (9) எனும் 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்கள் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் குவைத் நாட்டில்  ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மேத்யூஸ் தனக்கு விடுமுறை கிடைக்கும் போது, சொந்த ஊருக்கு குடும்பத்துடன் செல்வது வழக்கம். அதேபோன்று சமீபத்தில் அவர்கள் கேரளாவுக்கு விடுமுறையில் சென்ற நிலையில், பின் குவைத் திரும்பினர்.

இந்நிலையில் நேற்று இரவு இவர்கள்  தங்கி இருந்த குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து தப்பிக்க முடியாமல் மேத்யூஸ் மற்றும் லினி, 2 குழந்தைகள் உட்ப்பட 4 பேரும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பின் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினரின் துணையோடு மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.