
தமிழக பாஜக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் திருச்சி சூர்யா நீக்கப்பட்ட நிலையில் அவர் அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார். இது தொடர்பாக தற்போது அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், உண்மையான தொண்டரை அடையாளம் காண முடியாதவர் நிச்சயம் ஒரு கட்சியின் தலைவராக இருக்க முடியாது. நீங்கள் என்னை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக நான் பதிவிடவில்லை. நீங்கள் என்ன சொல்வது என்னை வேண்டாம் என்று. தற்போது நானே சொல்கிறேன் எனக்கு பாஜக வேண்டாம்.
என் மேல் நடவடிக்கை எடுக்க நிர்பந்தித்த உத்தமர்களின் யோக்கியத்தையும் தமிழகத்தில் பாஜகவை வளர விடாமல் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்ப்பவர்களின் உண்மை முகத்தையும் நிரூபிப்பது தான் தற்போது என்னுடைய வேலை. என் மீது நடவடிக்கை எடுத்த வீராதி வீரர்களுக்கு பாஜகவுக்கு குழி தோண்ட நினைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை ஏன். என்னை இவ்வளவு நாள் அண்ணாமலை தம்பியாக பார்த்த நிலையில் இனி என்னுடைய மறுபக்கத்தை பார்ப்பார். கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது அவருக்கு கைவந்த கலை. மேலும் எதையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதோடு ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
உண்மையான தொண்டனை அடையாளம் காண முடியாதவர், உண்மையான தலைவனாக இருக்க முடியாது. கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கெஞ்சுவதற்காக இந்த பதிவுகள் இல்லை. நீங்கள் என்ன,என்னை வேண்டாம் என்று சொல்வது, நான் கூறுகிறேன் எனக்கு பாஜக வேண்டாம். வேண்டவே வேண்டாம்.
என் மேல் நடவடிக்கை எடுக்க… pic.twitter.com/HrSItI1zia
— Tiruchi Suriyaa (@TiruchiSuriyaa) June 24, 2024