தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக போராடியது. எடப்பாடி பழனிச்சாமி அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் வகையில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கிய சமூக நிதி காவலர். விளம்பர வெளிச்சத்தில் விழாக்களை நடத்தக்கூடிய முதல்வர் ஸ்டாலின் எங்கள் ஆட்சி சாதனையை அவர் சாதனையாக கூறிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மாணவர்களுக்கு கல்வி நிதியை பெற்று தராமல் எங்கள் ஏரியா பக்கம் வந்து பாரு, தொட்டுப் பாரு என்று குழாய் அடி சண்டை போடுகின்றனர். கல்விக்கு நிதி வாங்க முடியாமல் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இவர்கள் வீட்டிற்கு முன்பு நின்று கோலம் போட்டு போட்டோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர். கோலப் போட்டி நடத்தி வருகிறார்கள். கல்விக்கு நிதி பெற்று தர முடியாத முதல்வர் ஸ்டாலின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ராஜினாமா செய்கிறேன் என்று அறிவிக்க தயாரா என்று ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.