உலகப் புகழ்பெற்ற சொகுசு ஆடை நிறுவனமான ‘குச்சி’ , பணக்காரக் குழந்தைகளுக்காக ஒரு டயப்பரின் விலை 7,000 ரூபாய் என்ற அளவில் பிரத்யேக டயப்பர்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகச் சமூக ஊடகங்களில் ஒரு செய்தி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

ஏழு டயப்பர்கள் கொண்ட ஒரு பேக்கின் விலை சுமார் 50,000 ரூபாய் என்றும், இது ஆர்கானிக் பருத்தி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு அடுக்குகளால் ஆனது என்றும் அந்தப் பதிவுகளில் கூறப்பட்டிருந்தது.

ஒரு மாத மளிகைப் பொருட்கள் வாங்கும் விலையில் ஒரு டயப்பரா என அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள், “இந்த டயப்பரை அணிந்தால் குழந்தை அழுகையை நிறுத்திவிடுமா?” எனப் பலவாறாகக் கிண்டல் செய்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வந்தனர்.

ஆனால், இந்த வைரல் செய்தியின் பின்னணியில் உள்ள உண்மை முற்றிலும் வேறானது. குச்சி நிறுவனம் இது போன்ற டயப்பர்கள் எதையும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. உண்மையில், குச்சி நிறுவனம் குழந்தைகளுக்கான ‘டயப்பர் பேக்’களை மட்டுமே அதிக விலையில் விற்பனை செய்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Glamzone India (@glamzoneindia)

“>

இணையத்தில் பரவிய டயப்பர் புகைப்படங்கள் அனைத்தும் போலியானவை மற்றும் வேடிக்கைக்காக உருவாக்கப்பட்டவை ஆகும். எனவே, ஒரு ஐபோன் விலைக்கு இணையான டயப்பர் என்பது வெறும் வதந்தி மட்டுமே என்று உறுதியாகத் தெரியவந்துள்ளது.