சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான காணொளிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. சில வேடிக்கையாக இருக்கும்; சில நெஞ்சைப் பதறச் செய்வதாக இருக்கும். அவ்வகையில தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான காணொளி ஒன்று பார்ப்போரைக் கலங்கடித்துள்ளது. அந்த காணொளியில், 3 மாத பெண் குழந்தையின் காலை அந்த குழந்தையின் சொந்த அத்தையே உடைத்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் குழந்தையின் தாய் குழந்தையை விட்டுத் தூரமாக இருக்கும்போதும், திடீரென குழந்தை கதறி அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த தாய், குழந்தையின் அருகே மறைவாகக் கேமராவை ஆன் செய்து வைத்துவிட்டு குளிக்கச் சென்றுள்ளார். ​எப்போதும் போல் குழந்தையின் அழுகைக் குரலைக் கேட்டு ஓடி வந்தவர், தான் ஆன் செய்து வைத்த கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது உறைந்து போனார்.

குழந்தையின் சொந்த அத்தையே, குழந்தை அமைதியாக இருந்தபோது வேண்டும் என்றே அதன் காலைப் பிடித்து உடைத்துள்ளார். இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், “சொந்த உறவினர்களைக் கூட இந்த காலகட்டத்தில் நம்ப முடியாது” என்று நெட்டிசன்கள் மிகுந்த வேதனையுடன் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.