சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்கள் வெளியாகி நம்மை ஆச்சரியப்படுத்தும். அவ்வகையில் தற்போது வெளியான இந்தக் காணொளியும், “இந்தக் காலத்தில் இப்படியொரு மாமியார் மருமகளா?” என்று பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான குறிப்பிட்ட அந்தக் காணொளியில், ஓர் இளம் மருமகள் தனது மாமியாரைத் தலையில் சுமந்து செல்கிறார்.
அதாவது, வயதான அந்த மாமியார் பிருந்தாவன் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். மாமியாரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, அவரைத் தலையில் சுமந்து மருமகள் அழைத்துச் செல்கிறார். இந்தக் காணொளி வைரலான நிலையில், “இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மாமியார் மருமகளா?” என்ற ரீதியில் நெட்டிசன்கள் தங்களது நெகிழ்ச்சியான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
