
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள மெக் டொனால்ட் உணவகத்தில் பிலானா – ஹம்பர்டோர் தம்பதி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சிக்கன் நக்கெட்ஸ் பார்சலாக வாங்கியுள்ளனர். இதனை காரின் இருக்கையில் வைத்திருந்தபோது ஒரு சிக்கன் நக்கெட்ஸ் இருக்கையில் சிக்கியுள்ளது. இதனை கவனிக்காமல் அந்த தம்பதியின் நான்கு வயது குழந்தை உட்காரப் போக சீட்டில் மாட்டி இருந்த சிக்கன் நக்கெட்ஸ் சிறுமியின் காலில் பட்டு வெந்துள்ளது
வலியால் துடித்த குழந்தையை பார்த்து பதறிய பெற்றோர் சிக்கன் நக்கெட்ஸ் முறையாக பார்சல் செய்து கொடுக்காத மெக் டொனால்ட் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மெக் டோனால்ட் நிறுவனத்தின் அஜாக்கிரதை தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்றும் இவர்களுக்கு 1.5 கோடி டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.
இந்த வழக்கு நான்கு வருடமாக நீடித்து வந்த நிலையில் சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. அதன்படி மெக் டொனால்ட் நிறுவனம் சரியான எச்சரிக்கையை பாக்கெட்டில் குறிப்பிடவில்லை மேலும் முறையாக பார்சல் செய்யாமல் உணவை கொடுத்தது தான் குழந்தையின் காயத்திற்கு காரணம் என்பது உறுதியாக தெரிய வந்ததை தொடர்ந்து 8 லட்சம் டாலர் இழப்பீடு விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.