மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இதனிடையே போராட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தெயி சமூகத்தை சேர்ந்தவர்கள் நிர்வாணமாக சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர்.

இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில் கடந்த மாதம் அமெரிக்க அரசுப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய அமெரிக்க பாடகி மேரி மில்பென்,  “மணிப்பூரில் தாக்கப்பட்ட பெண்களுக்காக தனது இதயம் வருந்துகிறது. இந்த விவகாரத்தை பகிரங்கமாக பேசியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. இந்தப் பெண்கள் இந்தியாவின் மகள்கள் மட்டுமல்ல, அவர்கள் கடவுளின் குழந்தைகள்” என்று மில்பென் ட்விட்டரில் எழுதினார்.