பொதுவாக ‌ ஒவ்வொரு பெற்றோரும் தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்க விரும்புவார்கள். குறிப்பாக அவர்களின் கல்வி, திருமணம் மற்றும் மருத்துவ செலவுகள் போன்ற பலவிதமான காரணங்களுக்காக பணத்தை சேமிக்க விரும்புவார்கள். அந்த வகையில் குழந்தைகளுக்கான சிறப்பான சேமிப்பு திட்டங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கி 15 வருடங்களுக்கு குறைந்தபட்சம் மாதம் 500 ரூபாய் செலுத்த வேண்டும்.

இந்த தொகை 18 வருடங்களுக்குப் பிறகு வட்டியுடன் சேர்த்து கிடைக்கும். இது அவர்களின் கல்வி மற்றும் திருமணம் போன்றவைகளுக்கு உதவும். இதனையடுத்து பெண் குழந்தைகளுக்கு இந்திய அரசால் தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தில் வரிச்சலுகைகள் இருப்பதோடு, மொத்தம் 8.2 சதவீத அதிக முதலீடு கிடைப்பதாக கூறப்படுகிறது. மேலும் ம்யூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஆயுள் காப்பீடு போன்ற திட்டங்களிலும் இணைந்து குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்கலாம்.