மத்திய அரசு வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு அனைவருக்கும் பான் கார்டு என்பது கட்டாயமாக்கி உள்ளது. நிதி சேவை குறித்த அனைத்து விவரங்களும் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால் பான் கார்டு விவரங்களை சரியாக கவனிக்க வேண்டும். உங்களுடைய பான் கார்டில் உள்ள பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து தகவல்களிலும் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் அதனை எளிதாக மாற்றம் செய்யலாம்.

  • அதற்கு முதலில் இ கவர்னன்ஸ் இணையதள பக்கத்திற்கு சென்று சேவைகள் என்பதை தேர்வு செய்து அதில் பான் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் பான் டேட்டாவில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு பான் கார்டு விவரங்களில் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கவும் என்பதை தேர்வு செய்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
  • உங்கள் பான் எண்ணை உள்ளிட்டு பான் கார்டு பயன்முறையை தேர்ந்தெடுத்து சமர்ப்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • உங்களுக்கு டோக்கன் எண் வழங்கப்பட்ட பிறகு சரி என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இதில் உங்கள் பெயர் மற்றும் மாற்றம் செய்யப்பட வேண்டிய விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • அதில் நெக்ஸ்ட் ஸ்டெப் என்பதை கிளிக் செய்து பான் எண்னை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
  • 15 நாட்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தபால் மூலமாக உங்களுக்கு பான் கார்டு அனுப்பி வைக்கப்படும்.