வங்காளதேசத்தில் பரிஸ்ஹல் மாகாணத்தில் உள்ள ஜலசக்தி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் 60 பயணிகளுடன் பேருந்து ஒன்று  சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நெடுஞ்சாலையின் அருகே இருந்த குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் பயணிகள் அனைவரும் குளத்திற்குள் மூழ்கி தண்ணீரில் தத்தளித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிய வந்துள்ளது.