இந்தியாவில் பாசுமதி அரிசி தவிர பிற வகை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காகவும், நியாயமான விலையில் போதுமான அரிசி உள்நாட்டில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், அரிசியின் சில்லறை விலை ஓராண்டிற்கு 11% மேலாக இருப்பதால் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தடையை தொடர்ந்து, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவின் அறிவிப்பை தொடர்ந்து ‘Panic Buying’ என கூறப்படும் வகையில், அமெரிக்காவின் பல்வேறு சூப்பர் மார்கெட்களில் நீண்ட வரிசையில் நின்று, பல மாதங்களுக்கு தேவைப்படும் அரிசியை, மூட்டை மூட்டைகளாக இந்திய மக்கள் வாங்கிச் செல்கின்றனர். இதனை கட்டுப்படுத்த, ஒரு குடும்பத்துக்கு ஒரு மூட்டை அரிசி மட்டுமே வழங்கப்படும் என்ற விதிமுறை மக்களை கவலை அடைய செய்துள்ளது.