
குற்றாலத்தில் குளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர். இப்போது அனைத்து அருவிகளிலும் மிதமாக தண்ணீர் கொட்டுகிறது. விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் குற்றாலத்தில் குளிக்க மாற்று திறனாளிகளுக்கு உதவிய காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலாளிகள் மாற்றுத்திறனாளிகளை பத்திரமாக அழைத்துச் சென்று அருவியில் குளிக்க வைத்தனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.