
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே செந்தில்குமார் (50) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் நடந்த பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஒரு மாணவி ஆசிரியர் மீது புகார் கொடுக்கவே அவர் 21 மாணவிகளுக்கு இது போன்று பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரை து செய்து சிறையில் அடைத்தனர். பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுப்பது மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்த அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஊட்டி அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்துள்ள செய்திகள் மனதை உலுக்குகின்றன.
மாணவிகள் புகார் அளித்த பின் தற்போது ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுவிட்டது சிறு ஆறுதல் அளித்தாலும், பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை எனும் கசப்பான உண்மை மனதை வாட்டி வதைக்கிறது. படிக்கும் மாணவச் செல்வங்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் தைரியம் அந்த ஆசிரியருக்கு எப்படி வந்தது? திமுக ஆட்சியில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கால் குற்றங்களின் கூடாரங்களாக பள்ளிக்கூடங்களே மாறி வரும் அவல நிலை மிகவும் கொடூரமானது.
நான்காண்டு ஆட்சியின் விளம்பரங்களில் மட்டும் ஆர்வம் காட்டும் மாண்புமிகு முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள், நாளைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க வல்ல பள்ளிக்கூடங்களில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்!
ஊட்டி அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்துள்ள செய்திகள் மனதை உலுக்குகின்றன.
மாணவிகள் புகார் அளித்த பின் தற்போது ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுவிட்டது சிறு ஆறுதல் அளித்தாலும், பெண் பிள்ளைகளுக்கு அரசுப்…
— Nainar Nagenthiran (@NainarBJP) July 5, 2025