கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று (பிப்ரவரி 11) மீண்டும் அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ₹20 உயர்ந்து ₹14,600-க்கும், ஒரு சவரனுக்கு ₹160 உயர்ந்து ₹1,16,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையைப் பொறுத்தவரை, கடந்த இரண்டு நாட்களாக எந்த மாற்றமும் இன்றி அதே நிலையில் நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ₹300-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹3,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
