2024-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணி குரூப் 2, குரூப் 2a பணிகளுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த 21.5.2022 அன்று நடைபெற்றுள்ளது. இந்த தேர்வை சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்று மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள 546 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 25-ஆம் தேதி இவர்களுக்கான முதன்மை தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில் பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2 குரூப் 2 ஏ முதன்மை தேர்வில் நடைபெற்ற குழப்பம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. அதாவது தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள் சரியாக அடுக்கப்படாமல் விட்டதே இந்த குழப்பத்திற்கு காரணம் என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.  வினாத்தாள் அச்சடிக்கும் நிறுவனம் தன்னுடைய பணிகளை அவுட்ஸோர்சிங் செய்ததும் இந்த குழப்பத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குரூப் 2 குரூப் 2a முதன்மை தேர்வில் ஏற்பட்ட குழப்பம் குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 குரூப் 2a முதன்மை தேர்வில் பல இடங்களில் வினாத்தாள்கள் மாறியதனால்தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது  என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.