
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது சமூக நீதிக்கு எதிரானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 2327 காலியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான குரூப் 2, 2A தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் பல பணிகளுக்கு இதுவரை இல்லாத வகையில் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீரென்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் இட ஒதுக்கீட்டு பிரிவினரில் 37 வயதை கடந்த எவரும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு பணிக்காக போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து விட்டு காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.