
தமிழகத்தில் 90 பணியிடங்களுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் http://tnpsc.gov.in என்ற இணைய முகவரிக்குச் சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் ஏப்ரல் 27ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.