கும்பம் ராசி அன்பர்களே,

இன்று பணவரவு சீராக அதிகரிக்கும். பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடிவிடும். அதிகார பதவியில் உள்ளவர்கள் மூலம் நல்லது நடக்கும். வியாபாரத்தில் அதிரடியான சில திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள் கண்டிப்பாக கிடைக்கும். எதிர்பாராத பணிகளால் அலைச்சல் அதிகரிக்கும்.

எண்ணிய படி செயல்களை செய்து காரிய வெற்றி காண முடியும். தேவையற்ற மன சஞ்சலங்கள் ஏற்படும். பேச்சை குறைத்துக் கொண்டு காரியங்களில் ஈடுபடுவது நல்லது. செல்வ போக வாழ்க்கை அமையும். யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுங்கள். பெண்கள் இன்று பெரியவர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். விரும்பிய உணவை உண்டு மகிழ்வீர்கள்.

இன்று மாணவர்கள் எதையும் சமாளித்து முன்னேறுவீர்கள். கல்வியில் முழு அக்கறை கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு மூன்று மற்றும் ஒன்பது

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்