பள்ளிக்குச் செல்லத் தயார் செய்ய எவ்வளவோ முயன்றும், சிறுவன் ஒருவன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழ மறுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இறுதியில் மேளதாளங்கள் வாசித்தும் அவன் அசராமல் தூங்கியது உறவினர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கம்போல பள்ளிக்குக் கிளம்ப வேண்டிய நேரத்தில், அந்தச் சிறுவன் நீண்ட நேரமாகியும் படுக்கையிலிருந்து எழவில்லை. பெற்றோர் தண்ணீர் தெளித்தும், சத்தமிட்டு அழைத்தும் எவ்வித பலனும் இல்லை. சிறுவனின் இந்த “உறக்கப் போராட்டத்தை” எவ்வாடியாவது முறியடிக்க எண்ணிய குடும்பத்தினர், ஒரு விநோதமான முடிவை எடுத்தனர்.
உடனடியாக அப்பகுதியில் இருந்த மேள வாத்தியக் கலைஞர்களை வீட்டிற்கு வரவழைத்தனர். சிறுவன் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள்ளேயே செண்டை மேளம் மற்றும் தாரை தப்பட்டைகள் முழங்கத் தொடங்கின. காதைப் பிளக்கும் சத்தம் அந்த வீடே அதிரும் வகையில் இருந்தும், அந்தச் சிறுவன் சிறு அசைவு கூட இன்றி போர்வையைப் போர்த்திக் கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தான்.
Family tries everything, even band players but boy refuses to wake for School pic.twitter.com/lwpnB4i44n
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 1, 2026
மேளச் சத்தத்திற்கு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நிலையில், சிறுவன் மட்டும் எழாததைக் கண்டு அனைவரும் சிரிப்பலைகளில் மூழ்கினர். “கும்பகர்ணனே தோற்றுப்போகும் அளவுக்கு இவன் தூங்குகிறானே” என அங்கிருந்தவர்கள் கிண்டல் செய்தனர்.
இந்த விநோதச் சம்பவம் குறித்த காணொளி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. “நிம்மதியான உறக்கம் என்பது இதுதான்” என்றும், “பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லாதவர்களின் உச்சகட்ட நடிப்பு இது” என்றும் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
