
அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ் மாத்தூர் பகுதியில் திருமண மண்டபம் உள்ளது. இதன் பின்புறம் பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை ஒரு தெரு நாய் மோப்பம் பிடித்து அந்த குழந்தையின் உடலை கவ்விக்கொண்டு தெருவில் ஓடியது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் தெருநாயை விரட்டிய நிலையில் குழந்தையின் உடலை அது கீழே போட்டுவிட்டு அங்கிருந்து சென்றது.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் கள்ளக்காதலில் பிறந்ததா.? இல்லையெனில் குழந்தையை கொலை செய்து அங்கு வீசினார்களா இல்லையெனில் குழந்தை பிறக்கும்போதே இறந்து பிறந்ததா என்ற பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் பச்சிளம் குழந்தை குப்பைமேட்டில் கிடந்த நிலையில் அதனை தெரு நாய் கவ்விகொண்டு சென்றது அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.