தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், நடிகை த்ரிஷா குறித்த கேள்விக்கு “இந்த குந்தவை கொஞ்ச நேரம் குந்த வைப்பது நல்லது” என்று நகைச்சுவையாகக் கூறியிருந்தார்.

இதற்கு நடிகை த்ரிஷா தனது கண்டனத்தைப் பதிவு செய்த நிலையில், தற்போது பார்த்திபன் அதற்கு விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

“>

த்ரிஷாவின் புகைப்படத்தைத் திடீரெனப் பார்த்தபோது என்ன சொல்வதென்று தெரியாமல் பேசியதாகவும், தனது பேச்சு சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்குத் தானும் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.