தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மே 02ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 03 மற்றும் 04ஆம் தேதியில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.