நவராத்திரி விழாவை முன்னிட்டு, பிரதமர் உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் 25 லட்சம் புதிய இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.
இதன் மூலம், மொத்த உஜ்வாலா இணைப்புகள் எண்ணிக்கை 10.60 கோடியை எட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு இது பெரிய உதவியாக இருக்கும் எனவும், சமையலில் புகைமூட்டமின்றி சுகாதாரமான சூழலை உருவாக்கும் நோக்கத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “நவராத்திரி காலத்தில் பெண்களை துர்க்கையாக மதிக்கும் பிரதமரின் எண்ணத்துக்கேற்ப, இந்த இலவச கேஸ் இணைப்புகள் பெண்களுக்கு வழங்கப்படும் பரிசாகும்.
उज्ज्वला परिवार का विस्तार
नारी शक्ति को बड़ा उपहार!नवरात्रि के शुभारम्भ के साथ ही निःशुल्क 25 लाख नए #PMUjjwala कनेक्शन की सौगात एक और प्रमाण है कि PM @narendramodi जी महिलाओं को देवी दुर्गा जी के सामान सम्मान देते हैं। यह निर्णय माताओं-बहनों के सम्मान और सशक्तिकरण के हमारे… pic.twitter.com/5bDaYobrSx
— Hardeep Singh Puri (@HardeepSPuri) September 22, 2025
“>
பெண்களின் அதிகாரமளிப்பு மற்றும் நலனுக்காகவே இந்த திட்டம் தொடக்கமாயிற்று, இப்போது அது மேலும் விரிவடைகிறது” என ஹர்தீப் சிங் பூரி தனது X பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மத்திய அரசின் இந்த அறிவிப்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மகளிர் குடும்பங்களில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
