தமிழகத்தில் குடும்பத் தலைவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த உரிமை தொகை யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது குறித்த வழிகாட்டுதல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெரும் குடும்பத்தில் ஆண்டு வருமானம் 2.50 இலட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும் என்றும் ஐந்து ஏக்கருக்கும் குறைவான நஞ்சை நிலம் 10 ஏக்கருக்கு குறைவான புஞ்சை நிலம், குடும்பத்தில் ஆண்டுக்கு 3600 யூனிட்டுக்கு குறைவான மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு மட்டுமே ரூபாய் 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ஒரு சில குடும்பங்களுக்கு மட்டுமே இந்த தொகை கிடைக்கும் என தகவல் வெளியான நிலையில் தமிழக முழுவதும் சுமார் ஒரு கோடி மகளிர் இந்த திட்டத்தால் பயன்பெற உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்