
முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் அனைத்தையும் புதுப்பிக்காவிட்டால் அவர்களுக்கு மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களை புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
நவம்பர் மாத இறுதிக்குள் 70% பணிகளையும் டிசம்பர் மாத இறுதிக்குள் நூறு சதவீதம் பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும். குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் புதுப்பிக்கப்படாத பட்சத்தில் மானியம் ரத்து செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அனைத்து நியாய விலைக் கடை விற்பனையாளர்களுடனும் ஆய்வுக் கூட்டம் நடத்திய குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களை புதுப்பிக்கும் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.