உலகின் முன்னணி பண பரிவர்த்தனை நிறுவனமாக திகழும் போன் பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வரும் நிலையில் இதன் மூலமாக மொபைல் ரீசார்ஜ், பேருந்து மற்றும் ரயில் டிக்கெட் என பல வேலைகளை எளிதில் செய்து முடிக்கலாம். இதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியும் வழங்கப்பட்டு வரும் நிலையில் போன் பே மூலமாக மெட்ரோ ரயில் டிக்கெட் கொள்ளும் வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக மும்பை மற்றும் டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் டிக்கெட் விலை வாடிக்கையாளர்கள் பெரும் வகையில் இருந்த நிலையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் களையும் போன் பே மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முன்பதிவில் அதிகபட்சம் ஆறு டிக்கெட்டுகள் வரை பெறலாம் எனவும் பயனர்களுக்கு 20% வரை கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.