அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு தாளுக்கு 150 ரூபாயாக இருந்த தேர்வு கட்டணம் 225 ரூபாயாகவும், டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு ஒன்பது தாழ்வுகள் எழுத வேண்டி உள்ளதால் 2050 ரூபாய் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென்று பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பல்கலைக்கழக தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் கல்லூரிகளில் கூடுதலாக செமஸ்டர் தேர்வு கட்டணத்தை செலுத்தியவர்கள் அதனை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.