
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேசினார். அவர் கூறியதாவது 25 ஆண்டுகளாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை பார்த்து விட்டீர்கள். சிலர் 14 ஆண்டுகள் 11 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இன்னும் அதே போக்குவரத்து நெரிசல், அதே அசுத்தம், அதே உடைந்த சாலைகள் காணப்படுகிறது. மக்கள் குடிநீருக்காக ஏங்குகின்றனர்.
இப்போது உங்களுக்காக பணியாற்ற மோடிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். பாஜகவுக்கு வாக்களியுங்கள். உங்களை குடும்பத்தைப் போல பார்த்துக் கொள்கிறேன். உங்களின் கனவு இனி எனதாக இருக்கும். கனவுகளை நிறைவேற்ற வலிமையை தாருங்கள் என பேசியுள்ளார்.