தமிழகத்தில் குடிமைப் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற முதன்மை தேர்வுக்கு எதிர் கொள்வோருக்கு உதவும் வகையில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி முதன்மைத் தேர்வை எதிர்கொள்வோருக்கு தல 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. நடைபாண்டில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வு எழுத பயிற்சி பெற்று வரும் அனைத்து மாணவர்களும் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இந்தத் தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை பெறுவதற்கு முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு நான் முதல்வன் திட்டத்திற்கான இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கும் நிலையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.