தமிழகத்தில் இனி உரிமம் பெறாமல் சிறு கடைகளில் மதுபானம் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான உரிமங்கள் அனைத்தும் மாநில மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகளின் கீழ் வழங்கப்படுகிறது. இவ்வாறு உரிமம் பெரும் கடைகளுக்கு மட்டுமே செயல்படும் அனுமதி தமிழக அரசு சார்பாக வழங்கப்படுகிறது.

ஆனால் உரிமம் எதுவும் பெறாமல் உணவகங்கள் மற்றும் தாபா போன்ற சிறு கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என அரசு தெரிவித்துள்ளது. அரசின் உரிமம் பெறாமல் வேறு இடங்களில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் இது போன்ற தடையை மீறி மதுபானம் விற்பனை செய்யும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.