தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 களம் சூடுபிடித்துள்ள நிலையில், அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை 4 நாட்களுக்கு மூட தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

முக்கிய தேதிகள்:

வாக்குப்பதிவு முன்னிட்டு: ஏப்ரல் 21, 22 மற்றும் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 (வியாழக்கிழமை).
​வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு: மே 4 (திங்கட்கிழமை).

​இந்தக் குறிப்பிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகள் மட்டுமன்றி, நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள பார்கள் மற்றும் அனைத்து வகையான மதுக்கூடங்களும் கட்டாயம் மூடப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்கவும், வாக்காளர்களுக்கு மது விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

​”இந்த உத்தரவை மீறி ரகசியமாக மது விற்பனை செய்தாலோ அல்லது மதுக்கூடங்களைத் திறந்து வைத்திருந்தாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இதனால் தேர்தல் முடியும் வரை மதுப் பிரியர்களுக்கு ‘டிரை டே’ (Dry Day) தான்